கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான தகவலை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தொழில் வாய்ப்புகள்
இதனடிப்படையில், வியாபாரம், கட்டுமானம் மற்றும் உதவி சேவைகள் துறைகளில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, நிதி காப்புறுதி, வீட்டுமனை, வாடகை மற்றும் குத்தகை போன்ற தொழில்துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் எண்ணிக்கையில் குறித்த துறைகளில் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
- யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.
- தேசிய அளவில் சாதித்த யாழ்.வட இந்து மகளிர் கல்லூரி மாணவி
- வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!
- இன்றைய இராசிபலன்கள் (12.11.2024)