• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் நாகபட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகிய செய்தி

Nov 9, 2024

யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கப்பல் சேவை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை குறித்து ஆராயப்பட்டுள்ளன.

ஊழியர்களின் நடத்தைகள்

காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்களே தற்போது உள்ளதால் பயணிகள் வெளியேற நேர தாமதம் ஏற்பவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மேலதிகமாக இரண்டு கருமபீடங்களைச் செயற்படுத்துமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தைகள் தொடர்பில் உள்ள முறைப்பாடுகளை உரிய வகையில் விசாரணை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் ஆளுநரால் வழங்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநர், துறைமுக அதிகார சபையின் பிரதிப் பிரதம செயற்றட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அதிகாரிகள் மற்றும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed