வரும் பண்டிகை காலத்துக்கு முன் கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் விலையை குறைத்தால், பாண் மற்றும் கேக்கின் விலை குறைக்கப்படும் என அகில
இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாணின் விலை 100 ரூபாயாகவும், ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய பேக்கரி பொருட்களின் விலையை நுகர்வோருக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயமாக தலையிட்டு இரண்டு உள்ளுர் நிறுவனங்களினால் 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் விலையை 150 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் வெண்ணெயின் விலையை 150 ரூபாவாகவும் குறைக்கப்படும்.
அத்துடன் ஒரு கிலோ கோதுமை மாக்கு 45 ரூபாவும், ஒரு கிலோ வெண்ணெய்க்கு 600 ரூபாவும் வரியை குறைப்பதன் மூலம் கோதுமை மா மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைக்க முடியும் என தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னர் பாண், கேக் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோர் நிம்மதியடைய முடியும் என ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
- யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.
- தேசிய அளவில் சாதித்த யாழ்.வட இந்து மகளிர் கல்லூரி மாணவி
- வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!
- இன்றைய இராசிபலன்கள் (12.11.2024)