• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறந்தும் இதனை செய்யாதீர்கள்!

Nov. 4, 2024

கந்தசஷ்டி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது.

கந்தசஷ்டியின் ஏழு நாட்களும் மாலை அணிந்து, காப்பு கட்டி விரதம் இருந்தாலும், காப்பு கட்டிக் கொள்ளாமல் விரதம் இருந்தாலும், கோவிலுக்கு சென்று விரதம் இருந்தாலும், எளிமையாக வீட்டிலேயே விரதம் கடைபிடித்தாலும் சில குறிப்பிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் விரத காலத்தில் மறந்தும் செய்து விடக் கூடாத விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள் 04.11.2024

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் இருக்கப்படுவதே கந்தசஷ்டி விரதம் ஆகும். அசுரர்களை அழிக்க சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு பொறியில் இருந்து பிறந்த குழந்தைதான் முருகப்பெருமான்.முருகப் பெருமானை வணங்கினால் வேண்டியவை யாவும் நிறைவேறும். அதிலும் அவர் சூரனை வெற்றி கொண்டு, தேவர்களை காத்தருளிய கந்தசஷ்டி காலத்தில் விரதம் இருந்து வழிபட்டால் தீராத வினைகள் தீரும். எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. 

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அசம்பாவிதங்கள்

சஷ்டி விரதத்தின் போது செய்ய வேண்டியவை 

கந்தசஷ்டி ஆரம்பம் முதல் சூரசம்ஹாரத்திற்கு மறு நாள் நடைபெறும் முருகன் திருக்கல்யாணம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகப்பெருமானின் சிந்தனையிலேயே விரதம் இருக்க வேண்டும்.விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளித்து, வீட்டில் இருக்கும் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும்.

சஷ்டியில் ஏழு நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.

ஏழு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும்.

சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது சிறந்தது. அப்படி படிக்க முடியாதவர்கள் எப்போதும் மனதில் ஓம் சரவண பவ மந்திரத்தையும், முருகா என்ற திருநாமத்தையும் உச்சரித்தபடி இருக்க வேண்டும்.சஷ்டி விரதம் இருப்பவர்கள் செய்யக் கூடாதவை 

சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.

யாரையும் திட்டவோ, கோபமாக பேசவோ கூடாது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed