அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 799 ரூபாவாகும்.
மேலும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராமின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளை சீனியின் ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய 243 ரூபாவாகும்.
மேலும், அனைத்து சதொச அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
- யாழ். புத்தூர் பகுதியில் 2 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்
- கொட்டித் தீர்க்கப்போகும் மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- இந்த 5 நாட்களில் மறந்தும் கூட துளசி இலைகளை பறிக்கக்கூடாது ?
- இன்றைய இராசிபலன்கள் (27.01.2025)
- திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா(27.01.2024,யேர்மனி)