நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம்…
இன்றைய இராசிபலன்கள் (25.10.2024)
மேஷம் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். சகல…
சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம் !
பாவங்களை போக்கி, புண்ணியங்களை பெருக்கிக் கொள்வதற்கான மாதங்களின் துவக்க மாதமாக ஐப்பசி மாதம்கருதப்படுகிறது. ஐப்பசி மாதம் என்பது மழைக் காலத்தின் துவக்க மாதமாகும். சூரிய பகவான், துலாம் ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் என்பதால் இதனை துலாம் மாதம் என்றும் சொல்லுவதுண்டு.…
யாழ் வடமராட்சியில் 2 நாட்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம்துயரத்தைஏற்படுத்தியுள்ளது . ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே தீடிரென உயிரிழந்துள்ளார் . நேற்றுமுன் தினம்…
மன்னாரில் கடும் மழை… வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர்,…
கனடாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000…
சுற்றுலா ஊக்கிவிப்பு பணியகம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக நாட்டின் அழகை கண்டு ரசிக்கலாம் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்…
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகிய யாழிலிருந்து சென்ற அம்புலன்ஸ்
நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர் நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த…
இன்றைய இராசிபலன்கள் (24.10.2024)
மேஷம் எதிர்பார்த்த சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள்…
பிறந்தநாள் வாழ்த்து. சர்மிளா நவரட்ணம் (24.10.2024,சிறுப்பிட்டி)
தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்றுதனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவர் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஎன்றும் நலம் கொண்டு வாழ்ந்திட அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்
யாழ். ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்று(22.10.2024)…