யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ் தம்பதி கொலையில் பொலிஸார் பகீர் தகவல்
யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார்.
சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்தார். இதையடுத்து வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் அவர் உயிரிழந்தார்.
இன்றைய இராசிபலன்கள் (31.10.2024)
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்குக் காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.