யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டுள்ளார்.
- பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!
- ஸ்பெயினில் வெள்ளம்: 95 பேர் பலி
- யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
- யாழ்.வடமராட்சி பகுதியில் பயங்கரம்!! கணவனும் மனைவியும் படுகொலை
- கனடாவில் கார் விபத்து! 4 பேர் பலி!