மேஷம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம் !
ரிஷபம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மிதுனம்
கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
யாழ் வடமராட்சியில் 2 நாட்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
கடகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.
சிம்மம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர்கள், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கன்னி
குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
துலாம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
விருச்சிகம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
தனுசு
சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கும்பம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
மீனம்
குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
- அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து !12 பேர் பலி
- செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள்
- சாதாரண தரப் பரீட்சை 2024 தொடர்பிலான அறிவிப்பு
- இன்றைய இராசிபலன்கள் (29.10.2024)
- தடம் புரண்ட புகையிரதம்!