• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகிய யாழிலிருந்து சென்ற அம்புலன்ஸ்

Okt 24, 2024

நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்

நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பியூலன்ஸ் வாகனத்தில் மூன்று நோயாளர்கள் பயணித்த நிலையில் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed