• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் தாக்கிய மின்னல் .

Okt. 23, 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள அராலி பகுதியில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். அராலி மேற்கு பகுதியில், இன்று (23-10-2024) மாணவன் ஒருவன் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி – மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே சென்றுள்ளான்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

இதன்போது மாணவன் மீது மின்னல் தாக்கிய நிலையில் வீட்டிற்குள் ஓடிச்சென்று கதறியுள்ளார்.

மேலும், அராலி மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் மின் இணைப்பானது மின்னல் தாக்கத்தினால் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது,

மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் மரணம்!

இதன்போது விரைந்து செயற்பட்டு மின்சார இணைப்பினை தடை செய்த நிலையில் பாரிய அளவு அசம்பாவிதம் எவையும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இடி மின்னல் ஏற்படும் வேளைகளில் வீட்டிற்கு வெளியே அநாவசியமாக நடமாடுவதை தவிர்ப்பதன் மூலம் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed