யாழ். ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்று(22.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த வயது 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 840 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டு சுண்ணாக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி M.F.M. பெடோஸிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது மற்றுமொரு போதை மாத்திரை வழக்கு யாழ். உயர் நீதிமன்றில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)
- மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
- பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு
- ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி