• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பிறந்து 45 நாட்களான பச்சிளம் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

Okt. 19, 2024

 யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

துயர் பகிர்தல். அருந்தவனாயகம் கஜமுகதேவி (18.10.2024,சிறுப்பிட்டி,கரந்தன்)

கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதர வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தது.

இன்றைய இராசிபலன்கள் (19.10.2024)

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed