• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம் 

Okt. 15, 2024

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாள்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

நாகை –  இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து !

இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக் காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை இரத்துச்  செய்யப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed