• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் .

Okt. 14, 2024

சிறிலங்கன் எயார்லைன்ஸில் விமானிக்கும் துணை விமானியான பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விமானி செய்த செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (14.10.2024)

அவுஸ்திரேலியா(australia) சிட்னியிலிருந்து கொழும்பு(colombo) நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானி,துணை விமானி முறுகல்

விமானிக்கும் துணை விமானியான பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து விமானி,துணை விமானியை விமானி அறையிலிருந்து வெளியே தள்ளிபூட்டினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீல் வைக்கப்பட்ட யாழ் திருநெல்வேலி பால்பண்ணை தொழிற்சாலை !

இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். 

விமானம் பயணத்தை தொடர்ந்த போதிலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானி அறையின் செயற்பாடுகள் பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்து விமானி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed