• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

Okt. 13, 2024

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (13.10.2024)

இலங்கை மத்திய வங்கி 

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளது.

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மாணவியின் உயிரை குடித்த நிமோனியா காய்ச்சல்

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும் சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் எனவும் உலக வங்கி (World Bank) தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தலில் (Sri Lanka Development Update – SLDU), எதிர்கால வாய்ப்புகள் என தலைப்பிடப்பட்ட வெளியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்

அதில் மேலும் 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed