நவராத்திரி பண்டிகையின் நிறைவான நாளாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். அம்பிகை, மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, அசுரர்கள் அனைவரையும் வதம் செய்து, வெற்றி கொண்ட திருநாளாகும்.
யாழ் வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்து!! இளைஞன் பலி!
இந்த நாளில் அம்பிகையின் மனம் குளிரும் வகையில் வழிபட்டால், நம்முடைய வாழ்க்கையிலும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை தந்தருள்வாள் துர்கா தேவி. தமிழகத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களை தொடர்ந்து வரும் தசமி திதியான பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய இராசிபலன்கள் (12.10.2024)
அதே சமயம், மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகை தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
தசரா பண்டிகை அன்று பக்தர்கள் ஆடிப்பாடியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். அதே போல் துர்கா தேவியின் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கமும் உள்ளது. புதிதாக கலைகள் கற்க துவங்குபவர்களும் இந்த நாளில் தங்களின் பயிற்சியை துவங்குவது வழக்கம்
யாழ் பலசரக்குக் கடையில் போதை மாத்திரை விற்றவர் கைது
இந்த ஆண்டு அக்டோபர் 12 ம் திகதி சனிக்கிழமை விஜயதசமி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இது புரட்டாசி கடைசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தொழில் நிறுவனங்களில், தொழில் செய்யும் பொருட்களை வைத்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவார்கள். வீட்டில் இருக்கும் வாகனங்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்து, அவற்றிற்கு சந்தனம், குங்கமம் தொட்டு வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2024, சிறுப்பிட்டி)
குழந்தைகளை முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்பவர்கள் இந்த நாளில் சேர்க்கலாம். அல்லது குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுத பழக்கும் போது, குழந்தைக்கு நல்ல குருவாக கிடைத்து அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை மனதார முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையின் தந்தையின் மடியில் அமர வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.
அல்லது பள்ளியில் வித்யாரம்பம் செய்கிறார்கள் என்றால் அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.
வித்யாரம்பம், விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரம்
காலை 06.30 முதல் 08.30 வரை
காலை 10.35 முதல் 01.20 வரை
மாலை 6 மணிக்கு மேல்