• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்? விபத்துக்கு இதுதான் காரணமா?

Okt. 11, 2024

கவரைப்பேட்டையில் மைசூர் – தர்பங்கா ரயில் விபத்துக்குள்ளானதற்கு தவறான சிக்னலே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து!

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு ரயில் (12578) பெரம்பூரில் இருந்து இரவு 7.44 மணி அளவில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. 8.27 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மீட்பு படையினர், பொதுமக்கள் சேர்ந்து ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர். 
 

யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்

பிரதான லைனில் இருந்து லூப் லைன் சென்ற ரயில் அங்கு ஏற்கனவே நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. இதுகுறித்த விசாரணைகள் தொடங்கியுள்ள நிலையில் மேலதிக தகவல்கள் விரைவில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed