• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

போஸ்னியாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலி

Okt. 5, 2024

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் உள்ள போஸ்னியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்! ஈரான் உச்சபட்ச தலைவர் அறிவிப்பு

இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன மற்றும் சில இடங்களில் வீடுகள் கிட்டத்தட்ட நீரில் மூழ்கியுள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலையில் 19 வயது யுவதி மரணம்?

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் காணவில்லை என அறிவிக்கப்பட்டு அந்நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014க்கு பிறகு போஸ்னியாவின் மிக மோசமான வெள்ளம் இதுவாகும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed