2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (GCE Ordinary Level Exam) நேற்று நள்ளிரவு (29.9.2024) வெளியாகியுள்ளது.
யாழில் மன விரக்தியடைந்த யுவதி உயிர்மாய்ப்பு
வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் (jaffna hindu college) 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 24 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 62 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்?
அதேவேளை, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 32 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் இவ்வாறு ‘A’ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் 28 மாணவர்கள் 8 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
கொடிகாமத்தில் விபத்து – இரண்டு வாகனங்கள் சேதம்
மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 26 மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் 19 மாணவிகள் 8 பாடங்களிலும் Aசித்தி பெற்றுள்ளனர்.
—
சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள்
நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் (G.C.E O/L Exam) பெறுபேறுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளிாகியுள்ளன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) மாணவர்கள் இருவர் 9 பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அந்த வகையில், கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களுமே இவ்வாறு சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களின் விபரங்கள் வருமாறு,
பிரான்ஸிஸ் சேவியர் – 8A B, மகேஷ்வரன் கஜப்பிரியன் – 8A B, ஜீவானந்தன் ஜதுமிதன்- 8A C, முகுந்தன் கஜரதன் – 7A B C, ஜெயசீலன் ரிதிக்ரோஷன் – 7A B C, சிவமூர்த்தி ஆகாஷ் – 7A B C, கிறிஸ்டி ஜான்சன் வசந்தன் – 7A B C, பிளட்டன் ஜூட் ஜெனிஸ்ரன்-7A B C,ஹரீஸ்வரன் நிலக்சன் – 6A 2B C, மௌலேஸ்வரன் விதுர்ஜியன் – 6A 2B C, சுரேஷ் விபுசன் 6A B 2C, ரஜீதன் டஜுசன் – 5A 2C 25, குமாரவடிவேலு துஷான் – 5A 3B C ஆகியோர் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.