அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தtஹுடன் மேலும், 18 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரில் கேளிக்கை விடுதி உள்ளது.
இந்த கேளிக்கை விடுதிக்கு வெளியே நேற்று இரவு பலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த கும்பல் விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!
- ஆட்டோவில் பிள்ளைகளுடன் பயணித்த ஆசிரியை விபத்தில் பலி
- தங்க விலையில் தொடரும் மாற்றம் : இன்றைய நிலவரம்
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- யாழில் இளம் குடும்பப் பெண் படுக்கையிலேயே மரணம்!!