விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் செந்தூரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்றைய இராசிபலன்கள் (23.09.2024)
கடந்த 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.