யாழ்பாணம் – சுன்னாகம் பகுதியில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
இச்சம்பவத்தில் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 01-09-2024 ஆம் திகதி குறித்த குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
இந்த நிலையில், தாயார் குழந்தைக்கு பாலூட்டிய வேளை பால் வெளியே வந்தது. இதனால் குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்
இதனையடுத்து குறித்த குழந்தை கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகள் இன்று நடைபெற்ற நிலையில், கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.