• Di.. Jan. 28th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Sep. 16, 2024

யாழ்ப்பாணம் – வடமராட்சிப் பகுதியில் உள்ள வல்லிபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள பிரபலமான விஷ்ணு ஆலயமான வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் 16 ம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா நாளை பிற்பகல் (17-09-2024) இடம்பெறவுள்ளது.

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று!

இந்நிலையில் திருவிழாவின் போது ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை பொலிஸார் ஒருவழிப் பாதையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, ஆலய பகுதிக்கு நுழைவதற்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியும், வெளியேறுவதற்கு மாவடி சந்தி ஊடக பருத்தித்துறை கொடிகாம் வீதியும் பயன்படுத்துவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவ காலங்களில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தாமதங்கள் ஏற்பட்டிருந்ததை அடுத்தே பொலிஸார் முன்னெச்சரிக்கையாக இந்த திட்டத்தை நடமுறைப்படுத்தியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed