புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.
கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
துவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டுவந்த நிலையில், ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்திருந்தார்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
ஜேர்மனியில் ஏற்கனவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாதங்கள் அதிகரித்துவரும் நிலையில், விசா இல்லாமல் ஜேர்மனிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜேர்மனியின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் வழியாக ஜேர்மனிக்குள் நுழைவோரும் சோதனைக்குட்படுத்தப்பட இருக்கிறார்கள்.
ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.