கனடாவின்(canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குயின் சார்லோட் தீவுகள் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம்
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.