• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !

Sep. 14, 2024

பிரித்தானியாவில் (UK) கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், பிரித்தானியாவில் தனது கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்கள் தனது கல்வி நடவடிக்கை முடியும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் தங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படாத இந்த நிதி வரம்பு, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகளுடன் நடைமுறைக்கு வரவுள்ளது என உள்துறை அறிவித்துள்ளது.

இதன்போது, லண்டனில் படிக்கச் செல்லும் மாணவர்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் £1,483 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.

இதேவேளை, லண்டன் வெளியே உள்ள மாணவர்கள் £1,136 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.

இன்றைய இராசிபலன்கள் (14.09.2024)

முன்னதாக இந்த நிதி அளவு லண்டனில் £1,334 மற்றும் லண்டனுக்கு வெளியே £1,023ஆக இருந்தது.

எனினும், நாடு முழுவதும் வாழும் செலவுகள் உயரும் நிலையில், இந்த நிதி வரம்புகள் பீரியடிக்கல் முறையில் திருத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், லண்டனில் 9 மாதங்களுக்குப் பராமரிப்பு நிதியாக £13,348 இருக்கும் பணத்தை மாணவர்கள் தங்கள் விசா விண்ணப்பத்தின் போது நிரூபிக்க வேண்டும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed