• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இளம் கர்ப்பிணி பரிதாப மரணம்

Sep. 13, 2024

அம்பாந்தோட்டையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து நேற்று (12-09-2024) காலை வெல்லவாய பிரதான வீதியில் பல்லேமலல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

குறித்த சம்பவத்தில் பல்லேமலல பக்தியைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் தனது இரண்டரை வயது மகனுடன் வீதியில் சென்றுகொண்டிருக்கும் போது அவர்களை முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (13.09.2024)

இந்த விபத்தின் போது, கர்ப்பிணிப் பெண்ணும், இரண்டரை வயது மகனும் காயமடைந்துள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இரண்டரை வயது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

இதனையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed