• Mo.. Jan. 6th, 2025 8:08:51 PM

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் விபத்தில் புலம்பெயர் ஒருவர் தமிழர் பலி

Sep. 10, 2024

ஜேர்மன் நாட்டில் இருந்து  யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.

கடந்த சனிக்கிழமை (07) அன்று தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது மனைவி தொடர்ந்து யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed