• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்

Aug. 31, 2024

 யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (31.08.2024)

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed