வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கலிங்கப் பட்டணத்திற்கு அருகில் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
யாழில் 2 குழந்தைகளின் தாய் மரணம்!
இதன் காரணமாக தமிழகம், புதுவை, ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.