• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல்.

Aug. 31, 2024

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

இந்தநிலையில், அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில்தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed