• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்து. யாழ் இளைஞன் உயிரிழப்பு

Aug. 30, 2024

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்!

!வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது.


மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும் வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பேரூந்து மோதியதில் மகள் உயிரிழப்பு.. தந்தை படுகாயம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் (வயது 30) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார். செல்லத்துரை கிருஸ்னபாலமன் (வயது 37) என்ற இளைஞரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed