• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாகிஸ்தானில் திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

Aug 30, 2024

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். 

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்!

வீட்டின் மேல் சரிந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் என பின்னர் தெரிய வந்தது. 

இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்!

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed