• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அடுத்த படம் சூர்யாவுடன்? இயக்குனர் ரஞ்சித் தகவல்!

Aug. 29, 2024

பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் படத்துக்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை வைத்து ஜெர்மன் என்றவொரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்கப்பட்ட போது “நான் சூர்யா சாரோடு இணைந்து படம் பண்ண நீண்ட நாட்களாக பேசிவருகிறேன். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் என்னுடைய அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறியுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed