• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இயக்கச்சிப் பகுதியில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

Aug 24, 2024

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், இயக்கச்சி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

வீதியில் மதுபோதையில் நடந்து சென்ற நபர் , வீதியின் குறுக்கே வந்து பேருந்தினை வழிமறித்துள்ளார். வீதியை விட்டு விலகுமாறு , சாரதியும் நடத்துனரும் பேசி விட்டு , பேருந்தினை எடுத்த போது , மீள அவர் பேருந்தின் குறுக்கே பாய்ந்த நிலையில், பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இராசிபலன்கள் (24.08.2024)

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed