• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

Aug. 23, 2024

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.

35 நாட்டவர்களுக்கு இலவச விசா!

தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு கடந்த 21ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

பிறந்தநாள் வாழ்த்து. ச.கனகம்மா.(23.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed