• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் .

Aug 22, 2024

நடிகர் விஜய் ‚தமிழக வெற்றிக் கழகம்‘ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் கொடி இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என முன்னதாக விஜய் தெரிவித்து இருந்தார்.

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு!

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து: 17 பேர் பலி !

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாவட்ட தலைவர்கள், சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். நீலாங்கரை – கேஷுவரீனா டிரைவ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி:

”நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தொங்கிய குடும்பஸ்தர்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம். சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நல சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.”

 உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த பின்னர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

கொடியின் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.  

இது கட்சிக்கொடி அல்ல. வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி. முறையாக அனுமதி பெற்று, தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரிடமும் தோழமை பாராட்டி உரிய அனுமதி பெற்று கொடியை ஏற்றி கொண்டாடுங்கள். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி எடுத்த பிறகு கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர். கொடிக்கம்பத்தில் தயாராக இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார். கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கொடி இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed