யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது இன்று காலை முதல் அசாதாரண காலநிலை நிலவி வருகின்றது.
சில இடங்களில் காற்றும், பலத்த மழையும் பெய்து வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று வீசிய பலத்த காற்றினால் யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையிலிருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவந்துள்ளது.
வவுனியாவில் பாடசாலை மாணவன் வைத்தியசாலையில்.
மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் புலோலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் கோவிலும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.