விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற திதி சதுர்த்தி. பவுர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவோம். தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரையும் சந்திரனையும் வழிபடுபவர்களின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி, வெற்றி, ஞானம், செல்வ செழிப்பு போன்றவற்றை விநாயகப் பெருமான் அளிப்பார் என்பது நம்பிக்கை.
இன்றைய இராசிபலன்கள் (21.08.2024
இந்த ஆண்டு மஹாசங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 22ம் திகதி வியாழக்கிழமை வருகிறது. ஞானத்திற்கும், மங்கல நிகழ்வுகளுக்கும் காரணமான குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில், விநாயகருக்குரிய மகா சங்கடஹர சதுர்த்தி இணைந்து வருவது கூடுதல் சிறப்பானதாகும்.வழிபாட்டு முறை
கடவுளுக்கு போட்ட மாலைகளை பக்தர்களுக்கு போடுவது சரியா?
அன்றைய தினம் சூரிய உதயத்திற்கு முன் விரதத்தை துவக்கி, சந்திர உதயத்தின் போது விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விநாயகருக்கு கொழுக்கட்டை, அருகம்புல் படைத்து வழிபடுவது சிறப்பு.
கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலுள்ள விநாயகர் படத்திற்கு அருகம்புல், வெள்ளை எருக்கம்புல் மாலை, மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபடுவது சிறப்பு.மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை கோவிலுக்கு செல்லும் போது எட்டு என்ற எண்ணிக்கையில் கொழுக்கட்டை செய்து எடுத்துச் செல்லுங்கள்.
ஸ்டாலினை தெரியாது. விஜய்யை தெரியும்! ஒலிம்பிக் மெடல் மனு பாக்கர்
விநாயகரை வழிபட்டு 11 முறை சுற்றி வந்து, தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் குட்டு வைத்து வழிபட வேண்டும்.
இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்தும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் விடுவித்து, நமக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்க வேண்டும் என மனதார விநாயகரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.சங்கடஹர சதுர்த்தி பூஜை முடிந்த பிறகு நீங்கள் எடுத்துச் சென்ற கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். இப்படி செய்வதால் அந்த குழந்தைகளில் யாராவது ஒருவருடைய வடிவத்தில் வந்து விநாயகரே உங்களின் கொழுக்கட்டை பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம்.
பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பு ஒரு தட்டில் சிறு துண்டு வெல்லத்தை வைத்து, உங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், விநாயகர் ஆகியோரை மனதில் நினைத்துக் கொண்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வழிபடுங்கள்.அதை அப்படியே வைத்து விட்டு, இரவு தூங்க செல்வதற்கு முன் அந்த வெல்லத்தை பொடியாக்கி, உங்கள் கைகளால் வீட்டின் நிலை வாசலுக்கு வெளிப்புறம் தூவி விடுங்கள்.
இதை எறும்புகள் வந்து சாப்பிடுவதன் மூலம் பல உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். அதோடு வெல்லம், மகாலட்சுமியின் அம்சமான பொருள் என்பதால் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வெல்லத்தை உயிர்களுக்கு தானமாக அளிக்கும் போது வீட்டின் செல்வ நிலை படிப்படியாக உயரத் துவங்கும்.