• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பஸ்ஸை விட்டு இறங்கியவர் பெண் அதே பஸ் மோதி உயிரிழப்பு

Aug. 20, 2024

கண்டி, அலதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் – கண்டி வீதியில்  கிரந்தெனிய சந்தியில் நேற்று (19) பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கனடா.ரொறன்ரோவில் துப்பாக்கியுடன் கைதான சிறுவன்!

கட்டுகஸ்தோட்டையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த வயோதிபப் பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற போது அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த வயோதிபப் பெண் தித்தபஜ்ஜல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, கும்புரேகம பிரதேசத்தில் வசிக்கும் 67 வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed