2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்யவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையத்தின் ஊடாக கடவுசீட்டு: வெளியான தகவல்
இந்த விடயம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில், “அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை.
செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளை
கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 300,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அந்த அனுமதிப்பத்திரங்களை அச்சடித்த பின்னர் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் புத்தகங்கள் மற்றும் வெள்ளை அட்டைகளில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பதினான்கு இலட்சம் கனரக வாகன அனுமதிப்பத்திரங்கள் ஆகும். நாட்டில் அதிகமானோர் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள்.’’ என குறிப்பிட்டார்.
இன்றைய இராசிபலன்கள் (20.08.2024)
மேலும், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு டிமெரிட் புள்ளிகளை சேர்க்கும் டி மெரிட் முறையும், மதிப்பெண் பெற்ற சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தினை தற்காலிகமாக இரத்து செய்யும் முறையும் அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முறையில் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் போக்குவரத்து மருத்துவ சான்றிதழைப் பெற்று புதிய சாரதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.