• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் முதியவர் ஒருவர் முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழப்பு

Aug. 19, 2024

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்கு சென்ற முதியவர் முச்சக்கரவண்டி மோதி மரணம் அடைந்துள்ளார்.

பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனைப்பந்தி, பருத்தித்துறை வீதி யாழ்ப்பணம் பகுதியைச் சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் ஆனி மாதம் 22 ஆம் திகதி சிவன் பண்ணை வீதியூடாக, திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீர் நெஞ்சு வலியால் மரணம்.

இந்நிலையில் குறித்த முதியவர் எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி அவ்விடத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் கடந்த மூன்றாம் திகதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதாரம் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed