• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் திடீர் நெஞ்சு வலியால் மரணம்.

Aug. 18, 2024

யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான தகவல்

குறித்து நபர் இன்று காலை கூலி வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக 11 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.

அவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் 12.15 மணியளவி கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed