காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோரை இன்னும் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானின் நபாட்டி பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதகாவும், அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- ஆற்றில் கவிழ்ந்த வாகனம் !சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
- யாழ் நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை!
- சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு !
- சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி