• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலைக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.

Aug. 13, 2024

15 வயதுடைய மாணவன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகறத் முஜாஹித் என்ற மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டில் , தனது மகன், திங்கட்கிழமை (12) பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மாணவன் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி திங்கட்கிழமை (12) காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை எனவும் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed