• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து- மூவர் சாவு!

Aug. 12, 2024

கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர்  படுகாயமடைந்துள்ளனர்.

யாழில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!! பக்கத்து வீட்டு இளைஞன் கைது!!

நிட்டம்புவயிலிருந்து, கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

 

துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)

மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சாரதியின் தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்

இந்நிலையில், காயமடைந்த மூவரில் ஒருவர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரும் பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed