பிரேசிலில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை?
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிசெய்துள்ளனர். வித்துக்குள்ளான இடம் தீப்பிளம்பாக அந்த இடமே மாறி உள்ளது.
யாரும் உயிருடன் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவில் இலங்கைத் தமிழன் கைது
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை, விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விபத்தை அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நிலையில் விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.