• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை?

Aug. 10, 2024

கனடாவில் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரம்டனில் 64 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரை சுமார் ஒரு வார காலமாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் என்பவரை இறுதியாக பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காணாமல் போயுள்ள யோகராஜ் என்பவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அவர், 5 அடி 2 அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுன்ட் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக நீல நிற சட்டையும், கருப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.ஹோண்டா ஒடிசி ரக வாகனம் ஒன்று பயன்படுத்தி இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed