• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி!

Aug 9, 2024

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் பணியாற்றுகின்றனர்.

ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி


இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக அந்தமான் தீவுகளில் நடந்தது. அங்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதையடுத்து கடந்த சில நாட்களாக ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வந்தது.


இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.

இந்நிலையில் அங்கு ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கும் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed